
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ம இகா தேசிய பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா சமூக வலைத்தளங்களில் இவரின் உரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டால் கடந்த தேர்தலை காட்டிலும் நமது நிலை மோசமாகிவிடும்.
குற்றம் சாட்டப்படும் பட்டியலில் முகமட் ஹசான் இருக்கிறார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நீங்கள் சிரிக்க வேண்டாம். நீங்களும் இதில் இருக்கிறீர்கள் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி பகிரங்கமாக கூறுகிறார்.