மிக விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை தக்காத்துக் கொள்ள முடியும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.
கடந்த மூன்று தவணைகளாக தாப்பா தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருக்கிறேன்.
அந்த வகையில் தாப்பா தொகுதியை தற்காத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் இந்திய சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மஇகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தேர்வு செய்வார்
வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயாராகி வருகிறது.
தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் இது பூர்த்தியாகி விடும் என்று அவர் சொன்னார்.