
பருவமழை காலத்தையும் பொருட்படுத்தாமல் நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது.
புதிய அரசாங்கத்தை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஆட்சிக்கு யார் வர வேண்டும். யார் வந்தால் இந்திய சமுதாயத்திற்கு நன்மை என்பதை இந்திய சமுதாயம் நினைத்து பார்க்க வேண்டும்.
நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர் நாட்டை ஆள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் கொடுக்கும் மானியங்கள் முறையாக சமுதாயத்திற்கு போய் சேர வேண்டும்.
அந்த வகையில் இந்திய சமுதாயம் சிந்தித்து நேர்மையான தலைவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்வதாக மூத்த அரசியல்வாதி டாக்டர் பி.எஸ். பிள்ளை தெரிவித்தார்.
தனது இனிய பிறந்தநாளை முன்னிட்டு மை பெமிலி நெட்வொர்க் குரூப் ஏற்பாடு செய்ய விழாவில் கலந்து சிறப்பித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.