
கோல காரிங் வட்டாரத்தில் உள்ள ரவாங் தமிழ்ப்பள்ளி உட்பட இந்திர பள்ளிகளில் சேதம் அடைந்திருக்கும் கால்வாய்களை சீரமைக்க புதிய குத்தகை யார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த கால்வாய்கள் விரைந்து சீரமைக்கும்படி ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வட்டாரத்தில் நான்கு பள்ளிகள் உள்ளன. இதன் கால்வாய்கள் அனைத்தும் விரைவாக சீரமைக்க வேண்டுமென அவர் குத்தகையாளரை கேட்டுக் கொண்டார்.

நேற்று சேதம் அடைந்துள்ள கால்வாய்களை சுவா வெய்க் கியாட் நேரடியாக பார்வையிட்டார்.
செலாயாங் கவுன்சிலர் அணி முனியாண்டி, ரவாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிங்காரம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.