
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் கட்சி இடம் பெற்றுள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தொடர்ந்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் நீடித்து பொதுத் தேர்தலை சந்திக்க தயார் என்று பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என அவர் சொன்னார்.
இந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனிந்து போட்டியிடும் என்று அவர் சொன்னார்.