
கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் மஇகா சார்பில் டத்தோ சிவராஜ் போட்டியிடும் வேளையில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ டி.மோகன் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று
ம இகா கோடிக் காட்டியுள்ளது.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ டி. முருகையா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ எம். சரவணன், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன், சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உஷா நந்தினி, கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் கஜேந்திரன் மற்றும் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ அசோஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மஇகா இம்முறை 12 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளது.
ம இகா வுக்கு கூடுதலாக கிடைக்கும் மூன்று தொகுதிகள் எது என்பது விரைவில் தெரிய வரும் வேளையில் ம இகா வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.