பகாங் மற்றும் பெர்லிஸ் மாநில சட்டமன்றங்கள் இன்று கலைக்கப்பட்டன.
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுடன் இவ்விரு சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
பகாங் மாநிலத்தில் சபாய் சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் காமாட்சி துரைராஜ் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தமிழச்சி என்று அன்போடு அழைக்கப்படும் காமாட்சி ஒரு துணிச்சல் மிக்க அரசியல்வாதி ஆவார்.
தமிழ் உணர்வு மிக்க இவர் கடந்த இரண்டு பொது தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை ஆற்றி உள்ளார்.
காராக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் பெருமளவில் உதவிக்கரம் நீட்டினார்.
அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் இவர் மீண்டும் சவால் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.