
பக்கத்தான் ஹராப்பான் ஆட்சி புரியும் மாநிலங்களில் சட்டமன்றத்தை கலைப்பது இல்லை என்ற முடிவை மறு பரிசீலனை செய்யும்படி புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில தேர்தல்களை தனியாக நடத்துவது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
ஆகவே நாட்டின் பொது தேர்தலோடு மாநில தேர்தல்கள் நடத்தப்பட்டால் அது நல்லது.
சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

