சரவாக் மாநில பள்ளிகளுக்கு சூரிய ஒளிக்கதிர் பொருத்தும் திட்டத்தில் ஊழல் புரிந்த குற்றச்சாட்டில் நஜிப் துன் ரசாக் துணைவியார் ரோஸ்மா மன்சோருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை மற்றும் 97 கோடி வெள்ளி அபராதம் விதித்துள்ளது.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை தள்ளுபடி செய்ய கோரி ரோஸ்மா மன்சோர் அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
அரசாங்க திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை.
தாம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி மட்டுமே.
மேலும் தீர்ப்பு கூறிய நீதிபதி டத்தோ ஜைனி மஸ்லான் தனக்கு எதிராக ஒரு சார்புடையவர் என்று ரோஸ்மா மன்சோர் தனது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்