விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை நோக்கி பக்கத்தான் ஹரப்பான் மகளிர் அணி தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஷா ஆலமில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பக்கத்தான் ஹரப்பான் மகளிர் அணியினர் பெரும் அளவில் திரண்டு ஆதரவு வழங்கினர்.
கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றியை உறுதி செய்ய மகளிர் அணியினர் உறுதி பூண்டனர்.