உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இச்சூழ்நிலையில் பைடனின் இந்த பேச்சு, ஷெரீப்பின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது.