சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் லீக் இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டியில் பூச்சோங் ஹண்டர்ஸ் மீண்டும் வாகை சூடியது.
கடந்த ஆண்டும் பூச்சோங் ஹண்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இவ்வாண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருப்பதாக பூச்சோங் ஹண்டர்ஸ் கிளப் தலைவர் விஜயன் தெரிவித்தார்.
பூச்சோங் ஹண்டர்ஸ் வெற்றியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் சிலாங்கூர் மாநில இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் மு.சு. மணியம், உதவி தலைவர் யாங் பஹாகியா டாக்டர் மனோ பரமசிவம், இளம் தொழிலதிபர் ராஜேந்திரன், பாலா ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
பூச்சோங் ஹண்டர்ஸ் கிளப் செயலாளர் தேவகண்ணன், குழு நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிளப் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.