கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2021,2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் குறைக்கப்பட்டது.
இப்போது எவ்வளவு மானியம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாத பட்சத்தில் நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் எம் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மலேசியா இந்தியர்கள் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் நேரமும் காலமும் கனிந்து விட்டதாக குறிப்பிட்டார்.
புத்ரா ஜெயாவில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி மலர இந்தியர்கள் பெரும் ஆதரவு வழங்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
கெப்போங் நாடாளுமன்ற கெஅடிலான் தொகுதி ஏற்பாட்டில் நேற்று தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் எம் ஜெயக்குமார், துணை தலைவர் எம்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.