
பினாங்கு மாநிலத்தில் பத்து காவானில் உள்ள பிளாங்கி பழைய குடியிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்தக் குடியிருப்பில் அந்நிய நாட்டவர்கள் அதிக அளவில் தங்கி இருக்கிறார்கள்.
சுகாதாரம் இல்லாத இந்த பழைய பிளாங்கி குடியிருப்பு அகற்றப்பட்டு புதிய குடியிருப்பு கட்டப்பட வேண்டும்.
இங்கு புதிய குடியிருப்பு கட்டப்பட்டதும் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கெராக்கான் கட்சி தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பிளாங்கி குடியிருப்பு கட்டடம் தற்போது சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.
இந்த குடியிருப்புக்கு பதில் நவீன முறையில் புதிய குடியிருப்பு எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே பத்து காவானில் வால்டோர் பண்டி பண்ணை நவீன முறையில் உருவாக்கப்பட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்லாந்தில் பண்டி பண்ணைகள் நவீன முறையில் உள்ளது. இதனால் மக்களுக்கு சுகாதார கேடு இல்லை.
இந்த பண்டி பண்ணை நவீன வடிவமைப்பு முறையில் கட்டப்பட வேண்டும் என்று பினாங்கு பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் கெராக்கான் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் டத்தோ பரமேஸ்வரன் தெரிவித்தார்.