பானி பூரி என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த பலகாரம் ஆகும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த பானி பூரி இப்போது மலேசியாவில் பரபரப்பாக பேசப்படும் பலகரமாக விளங்குகிறது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜாலான் ஈப்போ 4 ஆவது மைல் முத்தியாரா கொம்ப்ளக்ஸில் குமாரி யோகேஸ்வரி பாணி பூரி பலக்காரத்தை விற்பனை செய்து வருகிறார்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் எட்டு விதமான பானிபூரிகளை உடனுக்குடன் சுவையாக சமைத்து சூடாக தருகிறார்.
ஒரு பானிபூரியின் விலை இரண்டு வெள்ளி மட்டுமே என்று அவர் கூறினார்.
தீபாவளிக்கு தங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை உபசரிக்க பானிபூரி பலகாரம் வேண்டுவோர் 011-63911800 என்ற எண்ணில் ஆர்டர் கொடுக்கலாம் என்றார் அவர்.