கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளான் வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார்.
இவரின் சேவையானது தனது தொகுதியளவில் மட்டும் நில்லாமல் தேசிய அளவிலும் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்திலும் தேசிய ஊடகங்களிலும் குறல் எழுப்பு ஊள்ளார்.
கோவிட் பெறுந்தொற்று காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவுவதோடு மட்டுமின்றி கிள்ளானில்லுள்ள வியாபாரிகளும் குறுகிய காலத்தில் மீண்டு வியாபாரத்தை தொடர உதவியுள்ளார் என கிள்ளான் வர்த்தக இயக்கங்கள் தெரிவித்தன.
அதுமட்டுமன்றி, சிலாங்கூர் வாழ் எழிய மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரம் உயர பல திட்டங்களை மாநில அளவிலும் கிள்ளான் வட்டார அளவிலும் வெற்றிகரமாக செய்துள்ளார் என்று இயக்கங்கள் தெரிவித்தன.