கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பள்ளிகளுக்கு தலா 50 லட்சம் வெள்ளி மானியம் வழங்கி சாதனை படைத்து வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் 98 தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத்தை நேரடியாக வழங்கினார்.
இந்தியர்கள் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.