ஈப்போ,நவ27-
நம் நாட்டின் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களை உருவாக்கிய பெருமை , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்பித்த விரிவுரையாளர்களையே சாரும்.
அவ்வகையில் , ஈப்போ கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்பித்த இந்திய விரிவுரையாளர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சியை நடத்த அதன் ஏற்பாடு குழு திட்டமிட்டுள்ளதாக திரு.மகேந்திரன் தெரிவித்தார்.
கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்பித்த இந்திய விரிவுரையாளர்களைக் கொண்டாடுவோம் என்னும் நிகழ்ச்சி வருகின்ற 09/12/2023 (சனிக்கிழமை), காலை மணி 9.00 முதல் மாலை மணி 5.00 வரை ஈப்போ டவர் ரீஜென்சி விடுதியில் நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும்,1987 விடுமுறை கால பயிற்சி ஆசிரியர்கள் ( KDC) முதல் 1997 வரை கற்ற அனைத்து பயிற்சி ஆசிரியர்களும் இணைந்து படைக்கும் இந்நிகழ்ச்சியில் 10 இந்திய விரிவுரையாளர்கள் வருகை புரியவிருப்பதாகவும் கூறினார்.
ஆகவே, கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்ற ஆசிரியர்கள் மறவாமல் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
மேல் விபரங்களுக்கு , திரு. ஏ.கே. கிருஷணா ( 01133379027) , முனைவர் இராமன் சிலம்பு செல்வன் ( 0193856643) அல்லது திரு. கோ. மகேந்திரன் (0126187244) தொடர்பு கொள்ளவும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.