
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பினாங்கு மாநில அல்மா வட்டாரத்தை சேர்ந்த 125 இந்தியர்களுக்கு மாச்சாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.
ஒருவருக்கு 80 வெள்ளி வீதம் 125 பேருக்கு 10,000 வெள்ளியை அவர் வழங்கினார்.
அல்மா தோட்ட வீரர் ஜட முனீஸ்வரர் ஆலய தலைவர் சந்தானம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார், கவுன்சிலர் ஓங் ஜின், கிராம தலைவர் ராஜேந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.