
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்திற்க்கு மேலும் ஒரு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு ஹுசின் ஹப்பிஸ் சைட் அப்துல் ஃபசால் இன்று மக்களவையில் பிரதமருக்கான ஆதவரவை தெரிவித்துள்ளார்.
இவரோடு பெர்சத்து கட்சியிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கான தங்களது ஆதரவை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மடானி மக்களை உருவாக்கி விலை மற்றும் வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பை கைய்யாளுவதற்கு அரசாங்கத்திற்கு தாம் உதவ தயாராகா இருப்பதாகவும் நாட்டின் 10வது பிரதமராக தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரையும் மடானி அரசாங்கத்தையும் ஆதரிப்பதாக சைட் அபு ஹுசின் குறிப்பிட்டார்.
முன்னதாக மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அனுபவமும் ஆற்றலும் நிபுணத்துவமும் நிறைந்த நாடாளுமன்ற உறுப்பினரை ஏற்க பிரதமர் தயாராக இருப்பாரா என்ற கேள்வியை முன்வைத்தவர் இவராவார்.