சுங்கை புவாயா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனே சென்றார் உலுசிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன்.
நிலச்சரிவை கண்டவுடன் தமக்கு தொலைபேசியில் சுங்கை புவாயா கிராம தலைவர் பஃவ்சூல் தொடர்பு கொண்டதாக புவனேஸ்வரன் கூறினார்.
சுங்கை புவாயா சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கனரக வாகனங்கள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்துவதனால் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக புவனேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகத்திடம் தெரிவித்துள்ளாதகவும் சாலையை சீரமைத்துவரும் நிறுவனத்திடம் சரி செய்ய சொல்லியிருபதாகவும் அவர் கூறினார்.