
மலேசியாவிற்கு சிறப்பு வருகையை மேற்கொண்டிருக்கும் மொனாக்கோ நாட்டின் இளவரசர் இரண்டாம் ஆல்பெர்ட் பகாங் லன்சாங்கில் அமைந்துள்ள லில்லி செண்டோல் கடையில் இளைப்பாரும் காணொளி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நான்கு நாட்கள் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள மொனாக்கோ இளவரசரை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா ராஜ மரியாதையுடன் வரவேற்றார்.
பாகாங்கில் அமைந்துள்ள தமது இல்லத்திற்கு இளவரசர் ஆல்பெர்ட்டை மாமன்னர் அழைத்துச் சென்று உபசரித்துள்ளார்.
அதோடு, குவாலா கண்டாவில் அமைந்துள்ள யாணை மற்றும் புலி தேசிய காப்பகத்தை இருவரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அங்கிருந்து வரும் வழியில் லான்சாங்கில் அமைந்துள்ள செண்டொல் கடை ஒன்றில் மாமன்னரும் இளவரசர் ஆல்பெர்டும் செண்டோல் அருந்தி இளைப்பாரியுள்ளனர்.
அக்கடையில் இருந்தவர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

