இஸ்ரேல் – பாலஸ்தீன் போரை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களால் தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான எலோன் மஸ்க் நேரில் பார்வையிட்டார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு ஏவுகனை மூலம் தாக்கிய பகுதியான kfar aza எனும் நகரின் தோட்டப்புற பகுதியினை அந்நாட்டு பிரதமர் Benjamin netanyahu- வுடன் எலோன் மஸ்க் சுற்றி பார்த்தார்.
இதன் தொடர்பில் எலோன் மஸ்க்கும் bejanmin netanyahu-வும் ஏற்கனவே X சமூக வலைத்தளத்தில் கலந்து பேசியுள்ளதை இஸ்ரேல் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் இப்போரில் இரு தரப்பு பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைக்காக சில தினங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.