கோலாலம்பூர், டிச 11-
மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் முழு ஆதரவை வழங்கி வரும் அனைத்து பத்திரிகைகள், தொலைக் காட்சி நிறுவனங்கள் , இணையத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் வழங்கி வரும் ஆதரவு அளிப்பரியது.
அந்த வகையில் ஊடகவியாளர்களுடன் மனிதவள அமைச்சு தொடர்ந்து ஒத்துழைக்கும்.
மேலும் இரு தரப்புக்கும் இடையே உறவுகளை அமைச்சு மேம்படுத்தி கொள்ளும் என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் டவரில் இன்று மனிதவள அமைச்சு மற்றும் ஊடகவியாளர்களுடன் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சிவக்குமார், அமைச்சு சம்பந்தப்பட்ட செய்திகளை அதிக அளவில் வெளியிடும் பத்திரிகைகளின் பணி பாராட்டுக்குரியது.
சில வேளைகளில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளிவந்தாலும் அதை முறியடிக்கும் வகையில் பத்திரிகைகள் உண்மை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் பத்திரிகை யாளர்களுடன் திறந்த மனதுடன் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் உட்பட அனைத்து மொழிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.