
புத்ரா ஜெயா, டிச 11-
வசதி குறைந்த டாக்சி ஓட்டுநர்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வரும் ஜொகூர் மாநில இந்தியர் வாடைக்கார் ஓட்டுநர் சங்கத்திற்கு மனித வள அமைச்சர் வ சிவக்குமார் 10,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
பி-40 பிரிவைச் சேர்ந்த வாடகை கார் ஒட்டுநர்களுக்கு நிதி உதவி மற்றும் 34 வெள்ளியில் குருப் காப்புரிமை ஜொகூர் இந்தியர் வாடைக்கார் ஓட்டுநர் சங்கம் பெற்றுத் தந்துள்ளது.
வாடைக்கார் ஓட்டுநர்களுக்கு சங்கத்தின் மூலம் உதவும் வகையில் மனிதவள அமைச்சர் சிவக்குமார் தக்க நேரத்தில் 10,000 வழங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று சங்கத்தின் தலைவர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு அமைச்சர் சிவக்குமார் தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.