
பிரான்ஸ் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறி உள்ளனர்.
ஸ்டேட் மேரி அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் லீ மான்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லீ மான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை டிசிரே டூ, பிராட்லி பார்கோலா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பிரெஸ்ட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் துரோயஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

