ஆபாச அம்சம்கள் கொண்ட 3,670 அகப்பக்கங்கள் முடக்கம் – ஃபஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர், பிப் 27- 2022-ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஆபாச அம்சம்கள் கொண்ட 3,670 அகப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சட்டம் 588) கீழ் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய தரப்பின் விண்ணப்பத்தின் அடிப்படையில், ஆபாச அம்சங்கள் கொண்ட 1993 சமூக ஊடக உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“சமூக ஊடகத்தில் உள்ள ஆபாச விளம்பரங்கள் அடையாளம் காணப்பட்டு, தடை செய்யப்படுவதையும் உடனடியாக நீக்கப்படுவதையும் உறுதிசெய்ய எம்சிஎம்சி-இன் ஆக்கப்பூர்வமான கண்காணிப்பு நடவடிக்கையும் அச்சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்படும்”, என்று அவர் கூறினார்.

சமூக ஊடகம், செய்தி தாள்கள், இணையம் வழியான ஊடகங்களில் ஆபாச விளம்பரங்களைக் கையாள அமைச்சின் கொள்கை மற்றும் நடவடிக்கை குறித்து மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் நேரத்தின்போது காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி எழுப்பியக் கேள்விக்கு ஃபஹ்மி அவ்வாறு பதிலளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles