3,200 தொழில்முனைவோருடன் பிரம்மாண்ட பப்ளிக் கோல்ட் விருது அங்கீகார இரவு; RM30.98 மில்லியன் பரிசுகள் வழங்கி புதிய சாதனை!

கோலாலம்பூர், ஜூன் 27 –
தென்கிழக்காசியாவின் முன்னணி தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க உலோக நிறுவனங்களில் ஒன்றான பப்ளிக் கோல்ட், 2025/2026 நிதியாண்டிற்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் Award Recognition Night (ARN) 2026 நிகழ்வை, மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையமான (MITEC) மண்டபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தியது.

இந்நிகழ்வில் 3,200-க்கும் மேற்பட்ட பப்ளிக் கோல்ட் தொழில்முனைவோர் (PGBO) பங்கேற்று, நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் நடைபெற்ற விருது விழாவாக இது அமைந்தது.

நிகழ்வில் பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ லூயிஸ் எங் மற்றும் Aurora Italia International Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தின் ஸ்ரீ யுவோன் லிம் ஆகியோர் கலந்து  சிறப்பித்தனர்.

2008-ஆம் ஆண்டு பினாங்கில் தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்ட், இன்று மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தி, உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

2025/2026 நிதியாண்டில், பப்ளிக் கோல்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை RM27 பில்லியனைத் தாண்டியுள்ளதுடன், தகுதி பெற்ற தொழில்முனைவோருக்கு RM490 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, உலகளவில் அதிகளவில் Gold ATM-களை நிறுவிய நிறுவனம் என்ற பெருமைக்காக Guinness World Records அங்கீகாரத்தையும் பப்ளிக் கோல்ட் இந்த ஆண்டில் பெற்றுள்ளது. தற்போது மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் மொத்தம் 161 தங்க ATM-கள் நிறுவப்பட்டுள்ளன.

“One Team, Endless Records, Legacy Continues” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்வாண்டு விழாவில், 24-க்கும் மேற்பட்ட விருது பிரிவுகளில் 1,422 சிறந்த தொழில்முனைவோர் கௌரவிக்கப்பட்டனர். மொத்தமாக RM30.98 மில்லியன் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் 780 பேருக்கு RM15.81 மில்லியன் வழங்கப்பட்டதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பரிசுத்தொகை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

இவ்விழாவின் முக்கிய விருதாக Million Star Triple Diamonds பட்டத்தை பெற்ற துவான் ஹாஜி ஸுல்கிப்லி பின் ஷாபியே மற்றும் புவான் ஹாஜ்ஜா நஜ்தா பிந்தி முகமட் ஹுசைன் ஆகியோர் RM2.27 மில்லியன் நிதி ஊக்கத்தொகையைப் பெற்றனர்.

மேலும், சுமார் 18 ஆண்டுகளாக வெற்றிகரமான வணிக வலையமைப்பை உருவாக்கிய Million Star Double Diamond Mahagurus துவான் சியுகோர் ஹாஷிம் மற்றும் புவான் ஜோனைனா நூர்டின் ஆகியோருக்கு RM1.03 மில்லியன் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதனுடன், 2026-ஆம் ஆண்டுக்கான Public Gold Leadership Seminar (PGLS)-இல் பங்கேற்க 949 தொழில்முனைவோர் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இவர்கள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரங்களில் நடைபெறும் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக நிறுவனம் இதுவரை RM22 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டை செய்துள்ளது.

இந்நிகழ்வில் மேலும், உலகளவில் 1,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்படும் Malayan Tiger Gold Coin என்ற ஒரு அவுன்ஸ் 999.9 தூய தங்க நினைவு நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மலேசியாவின் தேசிய அடையாளமான மலாயன் புலியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நாணயம் வலிமை, துணிவு மற்றும் வளமை ஆகியவற்றின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பப்ளிக் கோல்ட் இந்திய தொழில்முனைவோர்கள்!

நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ லூயிஸ் எங், “பப்ளிக் கோல்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் எங்கள் தொழில்முனைவோர், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களின் அர்ப்பணிப்பே காரணம். ஒரே அணியாக தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து, எங்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்,” என்றார்.

2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டும் இலக்குடன், கல்வி, தொழில்நுட்ப புதுமை மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் மூலம் தனது சர்வதேச விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்த பப்ளிக் கோல்ட் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles