மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 70 ஆண்டை முன்னிட்டு பினாங்கில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள்!

கோலாலம்பூர், ஆக 21-
மலேசியத் தெலுங்கு சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மலேசியத் தெலுங்குச் சங்கம் (Telugu Association of Malaysia – TAM), 2026 ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளில், பினாங்கில் உள்ள Penang Waterfront Convention Centre (PWCC)-இல் மூன்று முக்கிய நிகழ்வுகளை நடத்தவிருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மலேசியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த தெலுங்குச் சமூகத் தலைவர்கள், பேராளர்கள், சிறப்பு விருந்தினர்கள், கலாசாரப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி, தெலுங்கு மொழி, கலாசாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைக் கொண்டாடவுள்ளனர் என்று மலேசியத் தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

  1. மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 46வது ஈராண்டுப் பேராளர் மாநாடு 2026

29 ஆகஸ்ட் 2026 | காலை 9.00 மணி – பிற்பகல் 2.00 மணி

நிகழ்ச்சிகள் மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 46ஆவது ஈராண்டுப் பேராளர் மாநாட்டுடன் ஆரம்பமாகும்.

மலேசியா முழுவதிலும் உள்ள TAM-இன் 30 கிளைகளைச் சேர்ந்த பேராளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

சங்கத்தின் இதுவரையிலான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், குறிப்பாக மலேசியாவில் தெலுங்கு மொழி, கலாசாரம், கல்வி, கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான TAM-இன் எதிர்காலத் திசையை விவாதிப்பதற்கும் இம்மாநாடு ஒரு முக்கியமான தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.

இம்மாநாட்டின் தலைமைச் சிறப்பு விருந்தினராக (Chief Guest of Honour) PPP Malaysia தலைவர் மற்றும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் லோகபாலா கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles