
கோலாலம்பூர் அக் 26-
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். இராஜனின் மறைவுக்கு பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலையில் மரணம் அடைந்த செய்தியை கேட்டு பெரும் வேதனையை அடைந்தேன்.
மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் 45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவரின் மறைவு தமிழ் பத்திரிக்கை துறைக்கு பேரிழப்பாகும்.
அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய அவர் இந்திய சமுதாயம் எதிர் நோக்கிய பல பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக எழுதியவர்.
குடும்பத் தலைவரை இழந்து பெரும் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ டாக்டர் லோகபாலா தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

