இரண்டாவது முறையாக சிலாங்கூர் மந்திரி பெசாராக மீண்டும் பதவியேற்றார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி! ஆட்சிக் குழுவில் இடம் பிடித்தார் ஹிண்ட்ராப் போராட்டவாதி ராயுடு

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார்.

ஷா ஆலமில் உள்ள இஸ்தானாவில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் அவர் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாக மொத்தம் பத்து பேரும் இன்று பதவி ஏற்றனர்.

பந்திங் சட்டமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்த ஜசெக வேட்பாளர் ராயுடு புதிய ஆட்சிக் குழு உறுப்பினராக பதவி ஏற்றார்.

ஜசெகவின் அடிமட்ட உறுப்பினரான ராயுடு ஒரு சமூக போராட்டவாதி ஆவார்.

தனது சகோதரர் கணபதிராவுடன் இணைந்து ஹிண்ட்ராப் உட்பட பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கி பல பிரச்சனைகள் குறித்து மிகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருக்கும் ராயுடு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருப்பது சரியான தேர்வாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles