மலேசிய கபடி சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளி மானியம்

புத்ரா ஜெயா ஆக 22
பல்வேறு அனைத்துலக கபடி போட்டிகளில் பங்கேற்கும் மலேசிய கபடி சங்கத்திற்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 20,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

இன்று புத்ரா ஜெயா மனித வள அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் 20,000 வெள்ளிக்கான காசோலையை மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் சதாசிவத்திடம் அமைச்சர் சிவகுமார் வழங்கினார்.

வரும் 2024 ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு பெரும் உதவி புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சதாசிவம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியாகும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே இந்திய ஹைதராபாத்தில் நடைபெறும் கபடி போட்டியில் மலேசிய கபடி குழு பங்கேற்கிறது என்று சதாசிவம் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles