HRD Corp விருதுகள் மரியாதைக்கு ஒரு சான்றாகும்! அமைச்சர் சிவகுமார் புகழாரம்

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp வழங்கும் விருதுகள் மரியாதைக்கு ஒரு சான்றாகும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மைக்டெக் மாநாட்டு மண்டபத்தில் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய மனிதவள முலதான மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களுக்கு விருந்து உபசரிப்பு விழாவில் 44 விருதுகள் வழங்கப்பட்டன.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ படிலா யூசோப் தலையில் நடைபெற்ற இந்த விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் உரையாற்றிய போது எச்ஆர்டி கோர்ப் விருதுகள் பெற்றவர்களை பாராட்டினார்.

இந்த ஆண்டு, HRD Corp
ஐகான் விருது மற்றும் HRD குழு (HR Icon Award And HRD Team of The
Year Award) போன்ற புதிய வகை விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்கக்கூடியது.

எச்ஆர்டி கோர்ப் மனிதவள மேம்பாட்டு விருதுகள் முதலாளிகளுக்கு உரிய அங்கீகாரமாக விளங்குகிறது.

இந்த விருதுகள் மூலம் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

Perkeso தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மானுக்கு எச்ஆர்டி கோர்ப் குழு விருது வழங்கப்பட்டது.

எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் இந்த விருது வழங்கும் விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles