
கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் இணைந்ததையடுத்து தஞ்சோங் கராங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கப்பேரி ஹனாபி மற்றும் செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷீத் ஆசாரி ஆகியோர் பெர்சத்துவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன், இருவரும் இப்போது அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்றார்.
Malaysia kini

