
காளிதாஸ் சுப்ரமணியம்
கோகுபு பாரு மே 10-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் இறுதி கட்ட பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளது.
நேற்றிரவு பத்தாங் காலியில் இந்தியர்களுடன் நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி , டத்தோ சந்திரகுமணன் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எதிர் பார்க்காத வண்ணம் இந்தியர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

