ஒவ்வொரு மாநிலத்திலும்சொந்த கட்டிடம் வாங்குவதற்கு இலக்கு!முக்குலத்தோர் சம்மேளனத் தலைவர் டத்தோ தங்கவேலு அறிவிப்பு

கிள்ளான், ஆக 16-
ஒவ்வொரு மாநிலத்திலும் சொந்த கட்டிடங்களை வாங்குவதற்கு மலேசிய முக்குலத்தோர் சம்மேளனம் இலக்கு வைத்திருக்கிறது என்று அதன் தேசிய தலைவர் டத்தோ கே.தங்கவேலு தெரிவித்தார்.

தற்போது பினாங்கு மாநிலத்தில் சொந்த கட்டிடம் உள்ளது.
அதேபோல் சிலாங்கூர் மாநிலத்தில் புதிய கட்டிடம் வாங்கப்பட்டுள்ளது.

பேராக், ஜொகூர் உட்பட எல்லா மாநிலங்களிலும் சொந்த கட்டிடங்களை வாங்க வேண்டும் என்று மாநில பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்.

கட்டிடங்கள் சம்மேளனத்திற் கு மிகப்பெரிய பலம் மற்றும் சொத்து.

இதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

இன்று போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் மலேசிய முக்குலத்தோர் சம்மேளனத்தின் முதலாம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் நலன், சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி,கலை, இலக்கிய பண்பாடு, கல்வி மேம்பாடு போன்ற சீரிய கொள்கைகளில் சிறந்த முன்னேற்றம் காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்மேளனம் அங்கீகாரம் பெற பாடுபட்ட சிலாங்கூர் மாநில தலைவர் வழக்கறிஞர் பாரி குப்புசாமி, மாநாட்டை சிறப்பாக நடத்திய பொது செயலாளர் பி.லெட்சுமணன் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு மாநாட்டை பேராக் மாநிலம் ஏற்று நடத்தும் வேளையில் இன்றைய மாநாட்டில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles