
பெட்டாலிங் ஜெயா, ஆக. 15-
சன்வே பிரமிட் ஐஸ் அரங்கில் நடைபெற்ற ஸ்கேட் ஆசியா 2026 பிகர் ஸ்கேட்டிங் போட்டியில், ஆர்டிஸ்டிக் F5 பிரிவில் ஷரண்யா டத்தோ கே. கிஷோர் குமார் கலந்து கொண்டு சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஷரண்யா தனது 21-வது வயதிலேயே ACCA படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். தற்போது ஆடிட்டராக பணியாற்றி வரும் அவர், தனது பணிச்சுமைக்கு மத்தியிலும் பிகர் ஸ்கேட்டிங் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், பகுதி நேரமாக பிகர் ஸ்கேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். கல்வி, வேலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஸ்கேட் ஆசியா போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஷரண்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

