


சன்வே, ஆக 15-
21 வயதிலேயே ACCA படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது தணிக்கையாளராக (Auditor) பணியாற்றி வரும் Sharannya A/P Datuk K Kishor Kumar தனது தொழில் மற்றும் கல்விப் பொறுப்புகளுக்கு மத்தியில், Skate Asia 2026 Figure Skating போட்டியில் பங்கேற்று Artistic F5 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Sunway Pyramid Ice-ல் நடைபெற்ற இப்போட்டியில் தங்கம் வென்றிருப்பது, அவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதுடன், பகுதி நேரமாக Figure Skating பயிற்சியாளராகவும் (Coach) செயல்பட்டு வருகிறார்.
ஒரே நேரத்தில் படிப்பு, தொழில், விளையாட்டு மற்றும் பயிற்சி என பல பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தி, சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய சாதனையாகும்.
21 வயதில் ACCA பட்டம், Auditor பணியுடன் Figure Skating போட்டியில் தங்கப் பதக்கம், மேலும் பகுதி நேர Coach — சரண்யாவின் இந்தப் பயணம் இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.
அவரது சாதனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

