பிரிமாஸ் சங்கம் தேர்தலில்டாக்டர் சீனு அணியினர் வெற்றி!

காளிதாஸ் சுப்ரமணியம்

சுபாங், நவ 26- மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான (PRIMAS) தேர்தலில் டாக்டர் சீனு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் சுபாங் டோர்செட் கிராண்ட் தங்கும் விசுதியில் (Dorsett Grand Subang) நடைபெற்றது.

இம்முறை முக்கிய பதவிகளுக்கு டாக்டர் சீனு மற்றும் கிருஷ்ணன் அணியினர் போட்டியிட்டனர்

இந்த தேர்தலில் தலைவராக டாக்டர் சின்னையா அழகன் என்கின்ற டாக்டர் சீனு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 89 வாக்குகள் கிடைத்தன.
கிருஷ்ணன் 74 வாக்குகள் பெற்றார்.

துணை தலைவர் தேர்தலில் டாக்டர் சீனு அணியைச் சேர்ந்த சண்முகம் 96 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணன் அணியில் போட்டியிட்ட டத்தோ இராமநாதன் 64 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

உதவித் தலைவர் பதவிக்கு சீனு அணியில் போட்டியிட்ட மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணன் அணியில் போட்டியிட்ட விஜய் பெருமாள் தலா 83 வாக்குகள் பெற்றனர்.

தேர்தல் அதிகாரிகள் மறு எண்ணிக்கை எண்ணலாம் என்று கேட்டபோது தாம் விட்டுக் கொடுப்பதாக விஜய் பெருமாள் கூறியதை தொடர்ந்து மகாலிங்கம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டாக்டர் சீனு அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாளன் 81 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணன் அணியில் போட்டியிட்ட பிரவின் 77 வாக்குகள் பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு சீனு அணியில் போட்டியிட்ட பூபாலன் துரைசாமி 79 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணன் அணியில் போட்டியிட்ட செல்வராஜு 77 வாக்குகள் பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டாக்டர் சீனு, தேர்தல் பிரசாரத்தின் போது உறுப்பினர்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

PRIMAS உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதாக அவர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles