அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை இன்னும் மோசமாகலாம்; டத்தோ ரெனா இராமலிங்கம் கோடி காட்டுகிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 25-
நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் சுயசேவையில் கால்பதிக்க வேண்டும் என்று டத்தோ ரெனா ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.

பிரிமாஸின் கௌரவத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம் இன்று இந்த முக்கிய அறிவிப்பை செய்தார்.

பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 26ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று சுபாங் டோசர்ஸ் விடுதியில் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் உணவகத் துறையில் அந்நியத் தொழிலாளர் பிரச்சினைகள் இன்று வரை ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர் இருந்தால் உணவக உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

அப்போது பிரிமாஸ் வாயிலாக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

அதன் பின் அந்நியத் தொழிலாளர்கள் நமக்கு கிடைத்தாலும் அதில் ஒரு பிரச்சினை இருந்துக் கொண்டு தான் வருகிறது.

வரும் ஆண்டுகளில் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை இன்னும் அதிகரிக்கலாம்.

ஆக உணவகத் துறை அடுத்தக் கட்டத்திற்கு முன்னோக்கி செல்ல வேண்டும்.

குறிப்பாக இந்திய உணவகங்கள் Self service எனும் சுயசேவையில் கால்பதிக்க வேண்டும்.

அதே வேளையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் அதிகம் வாப்பளிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய உணவகங்களை தொடர்ந்து காக்கும்.

மேலும் இந்திய உணவக உரிமையாளர்களுக்கு பிரிமாஸ் தான் மிகப் பெரிய அரணாகும்.

ஆக அனைத்து உணவக உரிமையாளர்களும் பிரிமாஸில் இணைய வேண்டும். எண்ணிக்கை தான் நமது பலம் என்று டத்தோ ரெனா இராமலிங்கம் கூறினார்.

இன்றைய ஆண்டுக் கூட்டத்தில் பிரிமாஸ் தோற்றுநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், தலைவர் டத்தோ சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles