எஸ்.பி. மணி வாசகத்திற்கு பெருந்தமிழன் ராஜராஜன் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது!

சென்னை ஆக 16-
மல்லை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லை சி.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மலேசியாவில் இருந்து உள்நாட்டு கலைஞர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு வருகையாளராக மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மல்லை சத்யா பேசும் போது மணிவாசகம் எனக்கு பல வருடங்களாக தெரியும் ஒரு நல்ல மனிதர்.

மலேசியாவிலும் சரி அனைத்து நாடுகளிலும் சரி தமிழர்களை ஒன்று ஒன்று இணைக்கும் விதமாக அன்புடன் பழகி அனைவரும் அன்பையும் பெற்றவர் கலை கலாச்சாரத்தில் முக்கிய பங்காற்றியவர்.

அதுபோல புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயரில் பல வருடங்கள் கலந்தாலும் அவரை மறக்காமல் மலேசியாவின் நூற்றாண்டு விழா எம் ஜி ஆர் விழா என்று நடத்தி இன்று வரை வெற்றி கண்டு உள்ளார்.

இவர் சேவையை பாராட்டி இந்த விருதை எங்கள் சங்கத்தின் சார்பாக வழங்கி உள்ளோம் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

அதுபோல மலேசியாவில் இருந்து கலைஞர்களும் டத்தோ கோபாலகிருஷ்ணன் பலரும் வந்துள்ளீர்கள். உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதனிடையே
மணிவாசகம் பேசும்போது எனது ஒரு முக்கிய நண்பராகவும் நல்ல மனிதராகவும் இருந்து வரும் அண்ணன் சத்யா அவர்களுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் சேவையை பாராட்டி இந்த விருதை கொடுத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles