
பிறை, ஆக 15-
பினாங்கு மாநில
MPKK Perai தலைவர் S. Sri Sangar மற்றும் MPKK Perai AJK உறுப்பினர்களுடன் இணைந்து, Taman Senangin மற்றும் Taman Perai Utama பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சார ஸ்கூட்டர் பயன்பாடு தொடர்பாக பொதுமக்களிடையே எழுந்துள்ள பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து இன்று காவல் துறையில் புகார் அளித்தனர்
சில மின்சார ஸ்கூட்டர் பயனர்கள் அதிக வேகத்திலும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துவதாகவும், இதனால் குறிப்பாக மாலை நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர சாலைப் பயனர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகார்களை MPKK Perai தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதுடன், குறிப்பாக Taman Senangin பகுதியில் மாலை நேரங்களில் போக்குவரத்து காவல் துறையினர் ரோந்து மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக MBSP மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் கவனம் செலுத்தி, நடைமுறையில் உள்ள அனைத்து சட்டங்கள், அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் MPKK Perai வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் குடியேற்றம் மற்றும் அனுமதி தொடர்பான விவகாரங்களை குடிநுழைவுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமலாக்க நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணித்து, விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் MPKK Perai கேட்டுக் கொண்டுள்ளது.
“இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டினரையும் குறிவைக்கும் நடவடிக்கை அல்ல. எங்கள் முன்னுரிமை குடியிருப்பாளர்கள், பாதசாரிகள் மற்றும் சாலைப் பயனர்களின் பாதுகாப்பையும், மலேசிய சட்டங்கள் மதிக்கப்பட்டு முறையாக அமல்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதே ஆகும்,” என்று S. Sri Sangar தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அனைத்து சம்பந்தப்பட்ட அரசு துறைகளும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, பொதுமக்களுடன் இணைந்து இக்கவலைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் MPKK Perai கேட்டுக் கொண்டுள்ளது.

