மலேசிய ஒரு தொழில் வளம் நிறைந்த நாடு! பாண்டிச்சேரியில் டத்தோ கோபாலகிருஷ்ணன் உரை

சென்னை ஆக 14-
மலேசிய தமிழர் சமூக பண்பாடு இயக்கத்தின் எஸ் பி. மணிவாசகம் ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுடன் கலந்து உரையாடல் பாண்டிச்சேரி யுனிவர்சிட்டி கல்லூரி ஆசிரியர்களுடனும் மாணவர்களிடமும் நடந்தது.

மலேசியாவில் இருந்து வந்த கலைஞர்களும் மற்ற பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதில் முக்கிய பிரமுகராக டத்தோ கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்

அவர் பேசும்போது தன் மலேசிய நாடு நல்ல நாடு அருமையான தொழில் வளம் உள்ளது மாணவ மாணவிகள் அங்கு வந்து என்ன செய்யலாம் தொழிலுக்கு வேண்டிய எல்லா கேள்விகளுக்கும் விரிவான பதிலை கொடுத்தார்.

தமிழ் மொழி ரொம்ப இனிமையானது இந்த பாரதி விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெருமையாக உள்ளது

நம் உறவு தொப்புள் கொடி உறவாக என்றும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்கள் தமிழை நன்றாக படிக்க வேண்டும் தொழில் செய்வதற்கு வேண்டிய எல்லா திறமைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு தகுந்த நாடு எங்கள் மலேசியா என்றார்.

இந்த விழாவில் மணிவாசகம் பேசும் போது சமூக உறவை வளர்க்க வேண்டும் மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் எங்கள் நாட்டோடு நீங்கள் ஒன்றிணைந்து எல்லா தொழிலையும் கற்றுக் கொள்ள இந்த கலந்துரையாடல் ஒரு அடித்தளமாக விளங்கும் என்றார்.

பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி கல்லூரியில் முக்கிய ஆசிரியர்கள் மற்றும் முனைவோர் சிறப்புரையாற்றினார்.

புதுவை பல்கலைக்கழகம் பாராதியார் தமிழ்யற்புலம் முனைவோர் இரவிக்குமாரும் இதில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles