கோலசிலாங்கூர் புக்கிட் தலாங் பிரிவு 2 தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலாபிஷேகம்- சங்காபிஷேகம் – மகாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!

புக்கிட் தலாங், ஆக 14-
கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் 140 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த புக்கிட் தலாங் பிரிவு 2 தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் அண்மையில் 108 கலாபிஷேகம் – 108 சங்காபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

50 ஆண்டுகள் முன் ஸ்ரீ மகா மாரியம்மன் மூர்த்தத்தை தமிழகத்தில் இருந்து கொண்டு வந்து நமது சமுகம் சிறந்தோங்க ஆலயத்தில் 108 இஷ்ட திரவிய மகாபிஷேகம், 27 நட்சத்திர கலாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ரவாங் கோலகாரிங் தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி குருக்கள் இந்த அபிஷேகத்தை ஆகம முறைப்படி நடத்தி வைத்தார்.

தெய்வத்திரு குச்சுபிள்ளை மூக்காய் அவர்களின் புதல்வரும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான டத்தோ டாக்டர் கு செல்வராஜூ தலைமையில் உபயம் சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகுதியில் மகேஷ்வர பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இந்த விழாவில் புக்கிட் தலாங் பிரிவு 2 தோட்டத்தின் முன்னாள் பாட்டாளிகள் மற்றும் கோவில் தலைவர் பெருமாள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles