கோலாலம்பூர் ஆக 14-
இரும்பு கடையில் பணிபுரிந்த தமிழக தொழிலாளி ஒருவரின் மரணத்திற்கு மாராடைப்பே காரணம் என்று மருத்துவ இறப்பு சான்றிதழ் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த தமிழக தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டதாக செய்திகள் தமிழக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
உண்மையில் அந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்படவில்லை.
மயங்கி கீழே விழுந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு மாராடைப்பே காரணம் என்று மருத்துவ இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே உண்மை நிலவரம். ஆகவே யாரும் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம். உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

