
கோலாலம்பூர் ஆக 13-
மலேசியா அனைவருக்கும் சொந்தமான நாடு.
மலேசியா எந்த ஒரு இனத்திற்கும் மட்டும் சொந்தமான நாடல்ல என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.
சபா, சரவாக் உட்பட அனைத்து மலேசியர்களுக்கும் இது பொதுவான தாயகம்.
அச்ச அரசியலை நிராகரிப்போம்
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மக்களிடையே பயத்தையும் பிளவையும் உருவாக்குகிறது.
இதுபோன்ற அச்ச அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து இனங்களின் திறமையும் தேவை
மலேசியாவின் வளர்ச்சிக்கு மலாய், சீன, இந்திய, ஓராங் அஸ்லி மற்றும் சபா–சரவாக் மக்களின் திறமைகள் அனைத்தும் அவசியம்.
வளர்ச்சிக்கு இனம் தடையல்ல
AI, semiconductor போன்ற நவீன துறைகளில் ஒருவரின் இனம் அல்லது மதம் முக்கியமல்ல. அறிவு, திறமை, புதுமை மற்றும் திறன்களே முக்கியம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்
அரசியல் மாற வேண்டும்
“நாம் யார்?” என்ற இன அடையாள அரசியலிலிருந்து, “நாம் ஒன்றாக என்ன உருவாக்க முடியும்?” என்ற வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு மாற வேண்டும்.
ஒற்றுமையே மலேசியாவின் பலம்
இனவாதம் மற்றும் வெறுப்பை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
ஒற்றுமை, திறமை மற்றும் கூட்டு வளர்ச்சியே மலேசியாவின் எதிர்காலம் என்று அவர் கூறினார்.

