

கோலாலம்பூர், ஆக 13-
யாரோ ஒருவர் செய்யும் தவறு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது.
ஆகவே உலோக பொருள் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரும்பு கடையில் வேலை செய்த தமிழக வேதாரண்யத்தை சேர்ந்த இந்திய தொழிலாளி முத்துகுமார் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரின் மனைவி புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மலேசிய காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
இருப்பினும் இதுபோன்ற கொடூர செயல்களை மிம்தா வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக தொழிலாளி தவறு செய்திருந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில்
நீங்களே சட்டத்தை எடுத்து கொண்டு தண்டனை வழங்க முடியாது.
இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் மறுசுழற்சி துறையை பெரிதும் பாதிக்கிறது.
போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் நமது வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தர மிம்தா அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராடி வருகிறது.
ஆனால் அந்நியத் தொழிலாளர் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்று கூறப்படும் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்று.
ஆகவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டத்தை மதிக்க நடக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்

