
புதுவை, ஆக 15-
இந்திய இன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மலேசிய பேராளர்கள் நேற்று புதுவை முதல்வர் ரெங்கசாமி அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
பி.காம் மற்றும் பி எல் படித்த பாண்டிச்சேரி முதல்வரை மலேசிய தமிழர் சமூக பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ் பி. மணிவாசகம் மற்றும் மலேசிய பேராளர்கள் சந்தித்தனர்

புதுவை முதல்வருக்கு டத்தோ கோபாலகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
முதல்வர் அனைவருக்கும் ஆசி வழங்கினார் இந்த நிகழ்ச்சி சித்தர் ஆலயத்தில் நடைபெற்றது.
மலேசிய கலைஞர்களும் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
டத்தோ கோபாலகிருஷ்ணன் பேசும்போது முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .
இதன் முக்கிய ஏற்பாடுகளை செய்த பத்திரிக்கை ஆசிரியரும் தமிழ் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் பாஸ்கரன் அவர்களுக்கும் எங்களை அழைத்து வந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்த மணிவாசகத்திற்கும் மேலும் பிரியா டிராவல்ஸ் இயக்குனர் பிரியா குமாரி உதவியாளர் சதீஷ் மற்றும் மலேசிய கவிஞர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் மற்றும் பிரபல கவிஞர் சீராகியும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

