மூத்த சமூக தலைவர் சுபா. நாராயணசாமி பிறப்பிக்கப்பட்டார்!

கிள்ளான் ஆக 16-
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற சமூக தலைவர் சுபா . நாராயணசாமி ஆவார்

நாராயணசாமி அவர்கள் மலேசிய இந்திய சமூகத்தின் மூத்த சமூகத் தலைவர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் (INA) இயக்கத்துடன் தொடர்புடையவர்

வரலாற்றுச் சம்பவங்களை நேரடியாக அறிந்த மூத்தவர்.

1943 ஆம் ஆண்டு, தனது 10ஆவது வயதில் INA-வின் பாலக் சேனாவில் இணைந்தார்.

சிறுவயதிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசப்பற்று மற்றும் தியாக உணர்வால் ஈர்க்கப்பட்டார்.

நேதாஜி மலாயாவில் உரையாற்றிய வரலாற்றுச் சம்பவத்தையும் நேரில் கண்டவர்.

சான் பெங் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்ற இவர், பின்னர் வங்கி துறையில் பணியாற்றி, பல ஆண்டுகள் உழைத்து 1990 ஆம் ஆண்டு 39 ஆண்டுகால சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

இளம் வயதிலேயே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

இவரின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை பாராட்டும் வகையில் மலேசிய முக்குலத்தோர் சம்மேளனத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles