
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 10-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவு அடையும் வேளையில் இரு கூட்டணிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் கஸ்தூரி பட்டு உட்பட பலரும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து ஜசெக, கெஅடிலான் அமானா , தேசிய முன்னணி கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

